வீட்டுக்குள் பிணைக் கைதியாக்கப்பட்ட பெண்… பின்னர் நடந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம்


பிரித்தானியாவில் பெண் ஒருவர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டு, பொலிசார் அவரை பத்திரமாக மீட்க முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.

பெண்மணி பிணைக் கைதியாக

கென்ட், டார்ட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சனிக்கிழமை பகல் 12.40 மணியளவில் பொலிசார் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த குடியிருப்புக்குள் 29 வயது நபரால் 36 வயது பெண்மணி ஒருவர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

வீட்டுக்குள் பிணைக் கைதியாக்கப்பட்ட பெண்... பின்னர் நடந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம் | Dartford Hostage Being Shot Later Dies Credit: Facebook

அவர் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், அது கைத்துப்பாக்கியால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள், அத்துடன் பயிற்சி பெற்ற பேச்சுவார்த்தையாளர் ஆகியோர் இணைந்து, அந்த நபருடன் கலந்து பேச முயற்சிகள் முன்னெடுத்தனர்.

மேலும், ஆயுததாரிகளான பொலிசாரும் சம்பவயிடத்தில் களமிறங்கினர். பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டது அந்த பெண்ணின் குடியிருப்பில் என்றே தெரியவந்தது.
ஒருவழியாக ரத்த காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு பொலிசார் லண்டன் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

வீட்டுக்குள் பிணைக் கைதியாக்கப்பட்ட பெண்... பின்னர் நடந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம் | Dartford Hostage Being Shot Later Dies @PA

சிகிச்சை பலனின்றி மரணம்

இதில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அவருடன் காணப்பட்ட ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சையில் உள்ளார் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், துப்பாக்கியை பயன்படுத்தியதாக அந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், தற்போது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பிணைக் கைதியாக்கப்பட்ட பெண் Hayley Burke என அவரது சகோதரர் தெரிவித்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

வீட்டுக்குள் பிணைக் கைதியாக்கப்பட்ட பெண்... பின்னர் நடந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம் | Dartford Hostage Being Shot Later Dies @PA

மேலும், குறித்த பெண்ணின் குடியிருப்பானது பொலிசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
விரிவான விசாரணைக்கு பின்னரே, நடந்தது என்ன என்பது குறித்து தகவல் வெளிவரும் என கூறுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.