"15".. கிண்டி, கூடுவாஞ்சேரி, மாம்பலம் பகுதி மக்களுக்கு.. ஹேப்பி நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே.. வாவ்..!

சென்னை:
கிண்டி, கூடுவாஞ்சேரி, மாம்பலம், அம்பத்தூர், பரங்கிமலை உட்பட செ15 பகுதி மக்களுக்கு சூப்பரான நியூஸை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த 15 பகுதிகளில் இருக்கும் ரயில் நிலையங்களை சகல வசதிகளும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் சமீபகாலமாக தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய இருப்புப் பாதைகளை அமைப்பது, ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நடை மேம்பாலங்களை அமைப்பது என பல திட்டங்களை தெற்கு ரயில்வே செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தாம்பரம் டூ செங்கல்பட்டு வழித்தடங்களில் பல சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுகின்றன. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைவதால் அந்தப் பகுதியை சுற்றியுள்ள ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகளில் தற்போது தெற்கு ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டத்தை தெற்கு ரயில்வே கையில் எடுத்துள்ளது. இதற்காக தென் மண்டலத்தில் வரும் 90 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ரூ.11.12 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள 15 ரயில் நிலையங்களும் அடங்கும். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டன.

அதன்படி, கிண்டி, பரங்கிமலை, சென்னை கடற்கரை, பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், சூலூர்பேட்டை, அரக்கோணம், மாம்பலம், கூடுவாஞ்சேரி, திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 15 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி. குகநேசன் தெரிவித்துள்ளார்.

நடைமேடைகளின் உயரத்தை அதிகரிப்பது, அகலமான நடைமேம்பாலங்களை அமைப்பது, சமிக்ஞை போர்டுகளை நிறுவுவது, ரயில் நிலையங்களுகக்கு இரண்டாவது நுழைவுவாயிலை அமைப்பது, கழிப்பறைகளை புதுப்பிப்பது, ரயில் நிலையங்களின் உட்புறத்தை மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என குகநேசன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.