புதுடில்லி ‘குறிப்பிட்ட நகரங்களில், டீசலில் இயங்கும் கார்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையை, மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை’ என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாற்று எரிபொருள்களுக்கு மாறுவது தொடர்பாக ஆலோசனை வழங்க, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில், முன்னாள் செயலர் தருண் கபூர் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குழு தன் பரிந்துரையை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தது. அதில், ‘மக்கள் தொகை, 10 லட்சத்துக்கும் மேல் உள்ள நகரங்களில், 2027க்குள், டீசலில் இயங்கும் கார்கள் பயன்பாட்டுக்கு முழு தடை விதிக்க வேண்டும்’ என்பது உட்பட பல பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை என்றும், பெட்ரோலிய அமைச்சகம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement