பாலக்காடு:சுற்றுலா பயணியரை கவரும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி.எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் ‘பாரத் கவுரவ்’ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் மே 19ம் தேதி கேரளாவில் இருந்து ஹைதராபாத் ஆக்ரா டில்லி ஜெய்ப்பூர் கோவா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி ‘கோல்டன் டிரையாங்கிள்’ என்ற திட்டப்படி சுற்றுலா மையங்களை காண பாரத் கவுரவ் ரயில் இயக்கப்பட உள்ளது.
மொத்தம் 11 இரவுகள் 12 பகல்கள் என 6475 கி.மீ. தொலைவு வரை பயணிக்கும் இந்த ரயில் மே 30ம் தேதி திரும்பும் வகையில் பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயண கட்டணம் இரவு தங்குமிடம் உணவு உட்பட அனைத்துக்கும் சேர்த்து ‘ஏசி’ வகுப்பில் பயணிக்க ஒருவருக்கு 36 ஆயிரத்து 050 ரூபாயும் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க ஒருவருக்கு 22 ஆயிரத்து 900 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் கவுரவ் ரயிலில் பயணிக்க விரும்புவோர் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. கவுன்டர்களை தொடர்பு கொள்ளலாம்.
கோவையில் 90031 40655 என்ற எண்ணை அழைத்தும் விபரங்களை கேட்டுப் பெறலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement