ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிநவீன R&D மையமான CITயில் டிராக்கில் 24 மணி நேரத்தில் 1780 கிமீ தொடர்ந்து இயக்கப்பட்டு ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆறு ரைடர்கள் கொண்ட குழுவால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முன்பாக விடா முதல் மின்சார வாகனமாக தொர்ந்து 24 மணி நேரத்தில் 350 கிமீ இயக்கப்பட்ட சாதனையை முறியடித்துள்ளது.
Hero Vida Electric Scooter
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஹீரோ நிறுவனத்தின் CIT மையத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனையில் “ 6 நபர்களை கொண்ட குழு 24 மணி நேரத்தில் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகபட்ச தூரம் 1780 கிமீ (1106.04 மைல்) ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.
ஆறு ரைடர்கள் கொண்ட குழு ஏப்ரல் 20, 2023 அன்று காலை 6.45 மணிக்கு சாதனை முயற்சியை துவங்கி ஸ்கூட்டரை ஓட்டுவதற்காக ரிலே முறையில் 6 நபர்களும் மாறி மாறி ஸ்கூட்டரை ஓட்டி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். பேட்டரி காலியாகும் சமயத்தில் வெறும் 20 நொடிகளில் இரண்டு பேட்டரிகளையும் ஸ்வாப் செய்து இயக்கியுள்ளனர்.
சாதனையின் போது சுற்றுப்புற வெப்பநிலை 40 C அருகில் மற்றும் 50C க்கு மேல் உள்ள வெப்பநிலை உள்ள சமயங்களிலும், VIDA V1 24 மணிநேரம் முழுவதும் அதிகபட்ச செயல்திறனை வழங்கியது.
விடா வி1 நுட்பவிபரம் அட்டவனையில் தொகுக்கப்பட்டுள்ளது.
Vida Specification | V1 Plus | V1 Pro |
Battery pack | 3.44 kWh | 3.94 kWh |
Top Speed | 80 Km/h | 80 Km/h |
Range (IDC claimed) | 143 km | 165 km |
Real Driving Range | 85 km | 95 km |
Riding modes | Sport, Ride, Eco | Sport, Ride, Eco, Custom |
Vida V1 Plus ₹ 1,28,350
Vida V1 pro ₹ 1,48,824