புதுடில்லி: ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உலகளவில் ‛ப்ரீ-பெர்த்’ எனப்படும், முன்கூட்டியே குழந்தைகள் பிறக்கும் நாடுகளில், நம் நாடு, ஐந்தாவது இடம் பிடித்துள்ளதாக, தகவல் வெளியாகி உளளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா., சபையின் குழந்தைகள் நிதியம் இணைந்து, ‛பார்ன் டூ சூன் ; டிகேட் ஆப் ஆக்-ஷன் ஆன் ப்ரீ-டெர்ம் பர்த்’ என்ற, தலைப்பில் தயாரித்துள்ள இந்த அறிக்கை, சர்வதேச அளவில், 46 நாடுகளைச் சேர்ந்த, 140க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளபட்ட ஆய்வின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
2020ல் உலகம் முழுதும், 13.4 மில்லியன் குழந்தைகள் முன்கூட்டியே பிறந்துள்ளனர் ; கிட்டதட்ட, 1 மில்லியன் குழந்தைகள் முன்கூட்டியே, பல சிக்கல்களால் இறந்துள்ளனர். பிறந்த குழந்தைகளில், 45 சதவீதம் பேர், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உட்பட, 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
கடந்த, 2010ல் 9.8 சதவீதமாக இருந்த முன்கூட்டிய பிறப்பு சதவீதம், 10 ஆண்டுகளில், 1.1 சதவீதம் உயர்ந்து, 2020ல், 9.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல், 2020ம் ஆண்டில், வங்கதேசத்தில் 16.2 சதவீதம், மலாவி, 14.5 சதவீதம், பாகிஸ்தான் 14.4 சதவீதமும் உள்ளன.
அதிக வருமானம் கொண்ட நாடுகளான, அமெரிக்காவில், 10 சதவீதமும், கிரீஸ்ல் 1.6 சதவீதமும், முன்கூட்டிய பிறப்பு விகிதங்கள் அதிகரித்துள்ளன.
உலகின் எந்த பகுதிகளிலும், முன்கூட்டிய பிறப்பு விகிதங்கள் மாறவில்லை எனவும், மோதல், காலநிலை மாற்றம், கொரோனா தொற்று மற்றும் அன்றாட வாழ்க்கை்கான செலவினங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகிய, நான்கு சிக்கல்கள், இதற்கு காரணமாகி உள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடும், ஒவ்வொரு ஆண்டும், 6 மில்லியன் குறைபிரசவங்களுக்கு காரணமாக உள்ளதாகவும், மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட, மிகவும் பலவீனமான 10 நாடுகளில், 10ல் ஒரு குழந்தை குறைபிரசவத்தில் பிறக்கிறது எனவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, உலகளவில் குழந்தைகளின், ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தை, முன்கூட்டிய பிறப்பு விகிதம் தடுப்பதற்கான, ‛அவசரநிலையை’ சத்தமின்றி ஏற்பட்டுள்ளதை, இந்த அறிக்கை விளக்குகிறது.
உலக சுகாதார அமைப்பின், தாய், புதிதாக பிறந்த குழந்தைகள், இளம்பருவ ஆரோக்கியம் மற்றும் முதுமைக்கான இயக்குனர், டாக்டர் அன்ஷூ பானர்ஜி கூறியுள்ளதாவது:
முன்கூட்டிய குழந்தைகள் பிறக்கும் விவகாரத்தை தடுப்பதில், முன்னேற்றம் தேவை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு, தரமான பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை மேம்படுத்துவதும் முற்றிலும் இன்றியமையாததாகும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்