Karnataka Elections 2023: கர்நாடகா சட்டசபை தேர்தல்: வரிசையில் நின்று வாக்களிக்கும் கன்னட நடிகர்கள், நடிகைகள்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

“ஷூட்டிங் டைம்ல CSK Matchபார்க்க போயிட்டேன்”
மக்கள் வாக்களிக்க வசதியாக பல்வேறு நிறுவனங்கள் இன்று விடுப்பு அறிவித்துள்ளன. கூட்டத்தை தவிர்க்க பலரும் காலையிலே வாக்குப்பதிவு மையங்களுக்கு படையெடுத்தார்கள்.

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கன்னட திரையுலக பிரபலங்களும் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பிரகாஷ் ராஜ் காலையிலேயே வாக்களித்துவிட்டார். பெங்களூர் சாந்தி நகரில் இருக்கும் புனித ஜோசப் பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சமூகவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இங்கு தான் தீர்மானிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். கர்நாடகா அழகாக இருக்க விரும்புகிறோம் என்றார்.

ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர் பிரகாஷ் ராஜ். வாக்களித்த கையோடு அவர் ட்விட்டரில் கூறியதாவது,

காலை வணக்கம் கர்நாடகா, நான் சமூகவாத அரசியல், 40 சதவீத ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்திருக்கிறேன். மனசாட்சியுடன் வாக்களியுங்கள் #justasking #KarnatakaAssemblyElection2023 என தெரிவித்துள்ளார்.

அவரின் ட்வீட்டை பார்த்த கர்நாடக மாநில ரசிகர்களோ, கண்டிப்பாக உங்களை போன்று நாங்களும் சமூகவாத அரசியலுக்கு எதிராகத் தான் வாக்களிப்போம் சார் என கூறியிருக்கிறார்கள்.

உலக நாயகன் கமல் ஹாசனின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். விரலில் மையுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.

நடிகர் ஜக்கேஷ் தன் மனைவி பரிமளாவுடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றார். நடிகர்கள் உபேந்திரா, கணேஷ், குமார் கோவிந்த், தனஞ்ஜெயா, நடிகைகள் அமுல்யா, மிலனா நாகராஜ் ஆகியோரும் காலையிலேயே வாக்களித்துவிட்டார்கள்.

பிரபல கன்னட நடிகரான மாண்டியா ரமேஷ் தன் மனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார். வாக்களித்த முடித்தவுடன் கையில் மையுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, நீங்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என திரையுலக பிரபலங்கள் தங்கள் ரசிகர்கள், ரசிகைகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

திரையில் பார்த்து ரசித்த பிரபலங்கள் இன்று மக்களுடன் மக்களாக சேர்ந்து வரிசையில் நின்று வாக்களிப்பது ரசிகர்களை கவர்ந்துவிட்டது. மேலும் தங்களுக்கு பிடித்தவர்களை நேரில் பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Soundarya Rajinikanth: அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அடுத்து தங்கை சவுந்தர்யா போலீசில் புகார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.