இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில் ஏப்ரல் 2023 விற்பனை செய்யப்பட்ட கார் மற்றும் எஸ்யூவிகளில் டாப் 10 இடங்களை பிடித்த மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முதல் இடத்தை மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் 20,879 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளர் என்ற இடத்துக்கு ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே கடும் போட்டியே நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் விற்பனை உயர்ந்து வருவதற்கு பஞ்ச், நெக்ஸான் மற்றும் டியாகோ கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
Top 10 Selling cars list – Apr 2023
மாருதி வேகன்ஆர் காரை தொடர்ந்து மாருதி ஸ்விஃப்ட், பலேனோ உள்ளிட்ட கார்களும் நான்காவது இடத்தில் பிரெஸ்ஸா காரை வீழ்த்தி 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி சந்தையில் முதன்மை வகிக்கும் மாடலாக டாடா நெக்ஸான் விளங்குகின்றது. இதனை தொடர்ந்து வெனியூ எஸ்யூவி உள்ளது.
முதல் 10 இடங்களில் மாருதி சுசூகியின் 6 மாடல்கள், டாடா மற்றும் ஹூண்டாய் என இரு நிறவனங்களும் தலா இரண்டு இடங்களை பெற்றுள்ளது.
Rank | Model | April ’23 Sales | April ’22 Sales | YoY Growth |
---|---|---|---|---|
1 | Maruti Wagon R | 20,879 | 17,766 | 18% |
2 | Maruti Swift | 18,753 | 8898 | 111% |
3 | Maruti Baleno | 16,180 | 10,938 | 48% |
4 | Tata Nexon | 15,002 | 13,471 | 11% |
5 | Hyundai Creta | 14,186 | 12,651 | 12% |
6 | Maruti Brezza | 11,836 | 11,764 | 1% |
7 | Maruti Alto | 11,548 | 10,443 | 11% |
8 | Tata Punch | 10,934 | 10,132 | 8% |
9 | Maruti Eeco | 10,504 | 11,154 | -6% |
10 | Hyundai Venue | 10,342 | 8392 | 23% |