இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Whatsapp மூலமாக சேட்டிங் செய்யும் வசதியை ஸ்மார்ட் வாட்ச்களுக்கு விரைவில் அறிமுகம் செய்ய
Meta நிறுவனம்
முடிவெடுத்துள்ளது. நீங்கள் Beta பயனராக இருந்தால் உங்களுக்கு Whatsapp மற்றும் smartwatch இணைக்கும் லிங்க் ஒன்று வெளியாகும். அது கிடைக்கவில்லை என்றால் Update செய்யவும்.
இந்த புதிய Whatsapp Wear OS நாம் பயன்படுத்தும் Android, Windows PC, MacOS ஆகிய கருவிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் WearOS அல்லது Apple Watch போன்றவற்றிற்கு அதிகாரபூர்வ ஆப் எதுவும் இல்லை. ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம் நம்மால் WearOS மற்றும் Whatsapp இரண்டையும் இணைக்கமுடியும்.
Whatsapp WearOS வசதிகள்
இதன் மூலமாக நேரடியாக மெசேஜ் அனுப்பவும், பெறவும் முடியும்.இதில் நாம் Chat செய்யும் விவரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.நாம் ஸ்மார்ட்வாட்ச் மூலம் டைப் செய்வது சிரமம் என்பதால் இதில் ‘Whatsapp Voice Note’ ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் நாம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.இதில் recent chats மற்றும் settings menu மட்டுமே இருக்கும். முழு விவரங்கள் நமக்கு தெரிய ‘Open On Phone’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
Google Passkey: இனி பாஸ்வேர்ட் இல்லாமலே போனை திறக்கலாம்! எப்படி?
எந்த ஸ்மார்ட் வாட்ச்களில் வேலை செய்யும்?
தற்போது Beta பயனர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இந்த OS சீரான பிறகு உலகம் முழுவதும் வெளியாகும். உங்களிடம் WearOS வசதியுள்ள ஸ்மார்ட் வாட்ச் இருந்தால் Whatsapp Beta பயனராக மாறி நம்மால் இதை பயன்படுத்தமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்