அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் மன்னார்குடி எம்.எல்.ஏ, டி.ஆர்.பி.ராஜா..!

சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜாவை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி,
டி.ஆர்.பி ராஜாவிற்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சராக பொறுப்பெற்ற பின் டி.ஆர்.பி.ராஜா ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பதவியேற்பு விழாவிற்க்கு பிறகு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.