சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுளின் பிக்சல் 7a ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுளின் மலிவுவிலை 5ஜி ஃபோனாக இது வெளிவந்துள்ளது. இந்த ஃபோனின் விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் வழியே இந்த ஃபோன் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 11R, சியோமி 12 புரோ மற்றும் விவோ V27 புரோ ஸ்மார்ட்போன்களுக்கு கூகுளின் பிக்சல் 7a சந்தையில் விற்பனை ரீதியாக சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைனை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு வெளியான பிக்சல் 7 ஃபோன் போலவே உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.1 இன்ச் FHD+ டிஸ்பிளே
- டென்சர் ஜி2 சிப்செட்
- 64 + 13 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
- 13 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ்
- மூன்று வண்ணங்களில் அறிமுகமாகி உள்ளது
- 4,410mAh பேட்டரி
- 20 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 5ஜி நெட்வொர்க்
- டைப் சி சார்ஜிங் போர்ட்
- இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- இந்த போனின் விலை ரூ.43,999. விலையில் குறிப்பிட்ட வங்கியின் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.4,000 அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Introducing the new #Pixel7a
Our most stunning A-series phone yet, with our signature #Pixel design.#GoogleIO pic.twitter.com/3aLWUvhDNb
— Made by Google (@madebygoogle) May 10, 2023