இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற 2023 யமஹா R3 பைக்கினை ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வெளியிட்டப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பெரிய அளவிலான மாற்றங்கள் பெறாமல் சிறிய அளவில் கூடுதல் வசதிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னணி நகரங்களில் உள்ள சில டீலர்கள் எம்டி-03 மற்றும் ஆர்3 பைக்குகளுக்கான முன்பதிவினை மேற்கொண்டு வரும் நிலையில் ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடும்.
2023 Yamaha YZF-R3
பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள யமஹா R3 பைக்கில் மிக நேர்த்தியான இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, எல்இடி டர்ன் இன்டிகேட்டர் பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
17 அங்குல வீல் பெற்று இரு பிரிவுகளை பெற்ற ஸ்டைலிஷான இருக்கை அமைப்பு கொண்டு , எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் ப்ளூடுத் சார்ந்த கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.
320cc பேரலல்-ட்வின், லிக்விடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10,750rpm-ல் 41.57bhp , 9,000rpm-ல் 30Nm டார்க் வழங்கி ஆறு வேக கியர்பாக்ஸ் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது. யமஹா R3 உலக மோட்டார் சைக்கிள் டெஸ்ட் சைக்கிள் (WMTC) மூலம் சான்றளிக்கப்பட்ட மைலேஜ் 25.4kmpl வழங்கும்.
டைமண்ட் சேஸ் கொடுக்கப்பட்டு சஸ்பென்ஷன் அமைப்பில் யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது.
ஜப்பானில் 2023 யமஹா YZF-R3 7,29,000 யென் (ரூ. 4.43 லட்சம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதவிர யமஹா R25 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய சந்தைக்கு R3 மட்டுமே வரவுள்ளது.