பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடிக்கடி ரன்வீர் சிங்கை தீபிகா படுகோன் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவின.
ஆனால் அது பற்றி இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். திருமண உறவுகள் குறித்து தீபிகா படுகோன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், “திரைப்படங்கள், உறவுகள் மற்றும் நம்மை சுற்றி நடக்கும் திருமணங்களின் தாக்கங்களை பார்த்துத்தான் நாம் வளர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
நாம் பயணிக்கும் பயணம் அல்லது இரண்டு பேர் பயணிக்கும் பயணம் வேறொருவரின் பயணத்தில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வீர்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அனைவருக்கும் பொறுமை மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பலருக்கும் பொறுமை குறைவாக இருப்பதாகவே நினைக்கிறேன். எல்லோரையும் போல் எனது வெற்றிகரமான உறவுக்கு பொறுமை முக்கிய காரணமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு அல்லது குழந்தை பெற்ற பிறகு நடிகைகளின் நடிப்பு தொழில் முடிவுக்கு வந்து விடுவதாக கூறப்படுவது குறித்து கூறுகையில், “அது போன்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஏனென்றால் ரன்வீர் எப்போதும் எனது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ரன்வீர் சிங் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.