இம்ரான் கானை உடனே ரிலீஸ் பண்ணுங்க.. இது இல்லீகல்.. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ராணுவ வீரருக்கு பட்டா வழங்க உறவினர்கள் மண்டியிட்டு போராட்டம்

பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான் கான், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தார். பாகிஸ்தானுக்கென தனி வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும், இந்தியா போன்ற வெளியுறவுக் கொள்கைகள் அதாவது அணி சேர நாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார். அமெரிக்கா சார்பு பாகிஸ்தான் என்ற நிலையை மாற்ற குரல் கொடுத்தார்.

மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கிய போது அதற்கு அழுத்தம் கொடுக்காத அமெரிக்கா, பாகிஸ்தான் வாங்க முடிவு செய்ததும் கடுமையாக எதிர்வினை ஆற்றியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தார் இம்ரான் கான். ஆனால் அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசியலில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்தன. நாட்டில் ஏற்கனவே இருந்த பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் திடீரென பேசு பொருளானது.

அதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறிந்ததன் பின் அமெரிக்காவின் சதி இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அமெரிக்காவையும், அந்நாட்டின் ஆதரவு பாகிஸ்தான் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் ராணுவத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார் இம்ரான் கான்.

தேர்தலை நடத்தக் கூறி பல்வேறு பேரணிகளை நடத்திய போது, பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். மக்கள் ஆதரவு இருக்கும் தலைவரை இன்னும் உயிருடன் இருக்க விட்டால் அது நாட்டிற்கு அச்சுறுத்தல் என அமெரிக்கா நினைத்ததாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகவே இம்ரான் கான் பொதுக்கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்தநிலையில் வெளிநாட்டு அதிகாரிகள் வழங்கிய பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி வெளிவந்த பின்னர், சிறப்பு ஊழல் படையால் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் நாடே கலவர பூமியானது.

King Charles III: டப்பாவாலாஸ் டூ சோனம் கபூர்… இங்கிலாந்து மன்னர் முடி சூட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்!

இந்தநிலையில் உடனடியாக இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைய வந்த முன்னாள் பிரதமரை வலுக்கட்டாயமாக கைது செய்தது சட்ட விரோதமானது எனக்கூறிய உச்சநீதிமன்றம், உடனடியாக இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.