ஜெருசலேம்,
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலம் நடந்து வரும் நிலையில் சமீப காலமாக அது தீவிரம் அடைந்து வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதியான மேற்குகரை நகரத்தில் பாலஸ்தீன ஆயுத போராளிகள் பலர் பதுங்கி இருப்பதால் அவர்களை களையும் நடவடிக்கையாக கருதி ஒரு வருடமாக அங்கு இஸ்ரேல் ராணுவம் தீவிர சோதனை நடத்தி வருகிறது. இதனால் அடிக்கடி அங்கு மோதல் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காசா நகரத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்கு கரை பகுதியில் நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் 2 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.