உதயநிதி ஸ்டாலின்: ‘ உங்க தொகுதியில இப்படி நடக்கலாமா.?’.. பள்ளியை இடித்த அவலம்.!

அமைச்சர்

தொகுதியில் மாநகராட்சி பள்ளிக்கூடத்தை இடித்து மோசடியாக கல்யாண மண்டபம் கட்டும் மாநகராட்சி தீர்மானத்தை திரும்ப பெற அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மா.சுப்பிரமணியனை கலாய்த்த உதயநிதி

இது குறித்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பதிவில், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் வார்டு 114 பங்காரு தெருவில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பல வருடங்களாக இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 115 மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வந்தனர். இந்த நடுநிலைப் பள்ளியை இடித்து புதிதாக நடுநிலைப்பள்ளி கட்டி தருகிறோம் என்று சொல்லி மாணவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டார் தியேட்டர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அமர்த்தப்படுகின்றனர்.

பிறகு மாநகராட்சி உருது நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்படுகின்றனர். வெறும் 4 கிளாஸ் ரூமில் அனைத்து பள்ளி மாணவர்களும் அமர்த்தப்படுகின்றனர். இந்த மாற்றங்களினால் சிறு குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறி கிட்டத்தட்ட 80 பேர் தான் பள்ளியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதி டிசம்பர் 2022 இல் 8000 சதுர அடி நிலத்தில் உள்ள பழைய பள்ளிக்கூடத்தை இடித்து புதிய நடுநிலைப்பள்ளி கட்டப் போவதாக தெரிவித்து அதற்கான மாமன்றத் தீர்மானம் பெறப்படுகிறது.

புதிய பள்ளிக்கூடம் கட்டப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு பேர் இடியாக அந்த இடத்தில் வார்டு 114 கவுன்சிலர் மதன்மோகன் நடுநிலைப்பள்ளிக்கு பதிலாக மாநகராட்சி சார்பில் கல்யாண மண்டபம் கட்டப் போகிறார் என்று தெரிய வருகிறது. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இதை எதிர்த்து கடந்த ஏப்ரல் 18ம் தேதி இடிக்கப்பட்ட பள்ளியின் முன் நின்று போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால்

வார்டு 114 கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர் மதன்மோகன், இந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்ட வேண்டும் என்று மாமன்ற தீர்மானம் கொண்டுவர மாநகராட்சிக்கு கடிதம் அனுப்புகிறார். அதையடுத்து ஏப்ரல் 28ம் தேதி மேயர் பிரியா தலைமையிலான மாமன்றம் மோசடியாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகிறது.

பெற்றோர்கள் இது குறித்து வெளியே பேசக்கூடாது என்றும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிகிறது. தொகுதி MLA உதயநிதி ஸ்டாலின் ஏன் அவர் தொகுதியில் பள்ளிக்கூடம் இடித்து சமுதாய நல கூடம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குழந்தைகளின் கல்வியில் அவர் அக்கறை காட்டவில்லை.

இதை எதிர்த்து அறப்போர் இயக்கம் இன்றைய தினம் முதல்வர் தலைமை செயலர், உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு, அமைச்சர் மற்றும் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி துணை ஆணையர் சரண்யா ஹரி IAS ஆகியோருக்கு புகார் அனுப்பி உள்ளோம். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதை அவர்கள் செய்யும் வரை அறப்போர் தொடரும்’’ என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.