கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் குறுகிய வித்தியாசம் இருக்கக் கூடும் என வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
122 முதல் 140 இடங்கள்வரை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது. இதே போல் 117 இடங்களை பாஜக கைப்பற்றும் என மற்றொரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும், குறுகிய வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலைபெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தில் 25 முதல் 33 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன.