தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் திமுக நகர் மன்ற தலைவருக்கும் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பொறுப்பு ஜெயப்பிரியா தலைமையில் நடந்த மாவட்ட திட்டக்குழு கூட்டத்தை விட்டு வெளியேறிய திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, தனது அலுவலகத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.
இதன்தொடர்ச்சியாக அதிமுக – பாஜக கவுன்சிலர்கள், கூட்டத்தை புறக்கணித்த காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், தலைவர் உடனே வர வேண்டும் என்றும் ஜெயப்பிரியாவிடம் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, நகர்மன்ற தலைவியின் அறைக்குள் சென்று உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளுஏற்பட்டது.