டோக்கியோ ஜப்பான் நாட்டில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானில் உள்ள தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.16 மணிக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ வரை உணரப்பட்டது. […]