பாஜக வெற்றிக்கு 1008 தாமரை பூஜை… கடைசியில் சொன்ன விஷயம் – நமிதா பரபர

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் நேற்று (மே10) பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகிய மூன்று கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டுள்ளன. வாக்குப்பதிவு நடந்த பிறகு பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலும்

கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிய வருகிறது.

இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 இடங்களை கைப்பற்றும் என கூறுகிறது. பகீர் கிளப்பும் விதமாக நியூஸ் நேஷன்-சிஜிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் ஜனதா தளம்(எஸ்) கட்சி 20 முதல் 30 இடங்களில் வெற்றி பெறும் என்றே சொல்கின்றன.

கடந்த 2018 தேர்தலில் ஜேடி(எஸ்) 37 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில். கருத்து கணிப்புகளை கடந்து எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்பது மே 13 ஆம் தேதி தெரிய வரும்.

இந்த நிலையில், நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான

கர்நாடகாவில் மீண்டும் பாஜக பெரும்பானமையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.

கர்நாடகா தேர்தலில் களமிறங்கும் அரசியல் வாரிசுகள்!

நடிகை நமிதா தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘ கர்நாடகா மாநிலத்தில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆயிரத்து எட்டு தாமரை மலர்களை வைத்து சிறப்பு பூஜை மேற்கொண்டேன். கருத்து கணிப்புகளை நான் நம்புவது கிடையாது. கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அங்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும் என்றார்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் தொடுத்துள்ள அவதூறு வழக்கை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நமிதா ‘அதை அண்ணாமலை பார்த்துக்கொள்வார்’ என கூறினார்.

பாஜகவில் இணைந்த நடிகை நமிதா கடந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரது தமிழ் உச்சரிப்பு வைரலாகி விமர்சிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் இவரும், குஷ்பூவும் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்தனர். திடீரென குஷ்பூவுக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்போது நடிகை நமிதா திடீரென ஆக்டிவ் மோடுக்கு வந்து கவனம் பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.