பெரம்பலூரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பாப்பாத்திக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளராக பணியாற்றுவதற்கான பணி ஆணையை தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தனது குடும்ப சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதுகலை பட்டதாரியான அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையினை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.