பிடிஆர் மாற்றம்… ஸ்டாலினுக்கு வரப் போகும் 2 சிக்கல்… திமுக ஆட்சிக்கு எதிராக ஆபரேஷன்!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்… நிதி நிர்வாகத்தில் முதுநிலை பட்டம், அமெரிக்காவின் பிரபல லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தக மேலாளர், சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் நிர்வாக இயக்குநர். இப்படி பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றம்இவரது நிதித்துறை சார்ந்த பரந்த அனுபவத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றே நிதித்துறையை ஸ்டாலின் வழங்கினார். திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சலசலப்புகள் ஏற்பட்டு, அமைச்சரவையில் மாற்றம் செய்யும் நிலைக்கு கொண்டு போய் விட்டுள்ளது. அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரும் இடம்பெற்றிருப்பது தான் பலருக்கு அதிருப்தியை அளித்து வருகிறது.
​தெறிக்க விட்ட பிடிஆர்ஏனெனில் இவரது செயல்பாடுகள் இரண்டு ஆண்டுகளாக சிறப்பானதாக இருந்ததாக கூறுகின்றனர். வருவாய் ஈட்டுவது, கடனை குறைப்பது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, இந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா எனக் கண்காணிப்பது என நான்கு விதங்களில் நிதித்துறையை அணுகிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மேலும் மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைக்காக மல்லுக்கட்டியது முதல் ஆளுநர் மாளிகையின் செலவீனத்தில் கணக்கு கேட்டது வரை அனல்பறக்க விட்டிருந்தார்.​
​​
உதயநிதி நட்பு வட்டாரம்இவை அனைத்தும் டெல்லிக்கு நெருக்கடியாய் மாற ஆடியோ ஆபரேஷனை செய்து பிடிஆர்-ஐ சிக்கலில் கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர். ஆனால் இவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தும் வகையில் தான் ஆடியோ ஆபரேஷனே நடந்துள்ளது.
​கிச்சன் கேபினட் அழுத்தம்இந்த சூழலில் அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு பதிலாக வேறு துறைக்கு மாற்றிவிடலாம் என கிச்சன் கேபினட் வரை அழுத்தம் கொடுக்கப்பட்டதாக பேச்சு அடிபடுகிறது. இது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிடிஆரை மாற்றுவது சரியாக இருக்காது.
​திமுகவிற்கு பின்னடைவுபிடிஆரை ஸ்டாலின் தனக்கு நெருக்கமாக வைத்து கொண்டு, அரசின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு கரும்புள்ளி விழுந்துவிட்டதாக கருதி வேறு துறைக்கு மாற்றுவது என்பது அவர் தவறு செய்துவிட்டார் எனக் கருதி தூக்கி எறிவதற்கு சமம். ஸ்டாலின் அப்படி செய்யக் கூடாது என்ற குரலை பல இடங்களில் கேட்க முடிகிறது. இந்நிலையில் பிடிஆரின் துறை மாற்றம் நிகழ்ந்தால் திமுக அரசிற்கு இரண்டு விதமான பின்னடைவுகள் ஏற்படும் என்கின்றனர்.
இரண்டு விதமான சிக்கல்ஒன்று, திறமையான நிதியமைச்சரை திமுக அரசு இழக்கும். இரண்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக அரசு பயந்துவிட்டதாக பார்க்கப்படும். ஆடியோ விவகாரமும் உண்மை என்றாகி விடும். அதுமட்டுமின்றி அண்ணாமலையை மிகப்பெரிய ஆளாக வளர்த்து விடுவதற்கு திமுகவே வழி ஏற்படுத்தி தந்ததாக அமையும். இதற்கிடையில் டெல்லியின் வியூகம் பற்றி விசாரித்தால், தம்மை எதிர்ப்பவர்களை எங்காவது தூக்கி அடித்து டம்மி பீஸாக மாற்றி உட்கார வைத்துவிட வேண்டும்.​
​​
​ஸ்டாலின் எடுக்கும் முடிவுஅதன்பிறகு அவர்களை டார்கெட் லிஸ்டில் இருந்து நீக்கிவிடுவது. இப்படி குடைச்சல் கொடுக்கும் பெரும் தலைகளை மாற்ற ஆபரேஷன்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனவே பாஜகவிற்கு அல்வா சாப்பிடுவது போல் ஒரு வாய்ப்பை திமுக அரசு ஏற்படுத்தி தருமா? இல்லையா? என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.