முத்தையா முரளிதரனுடன் இணையும் முகேஷ் அம்பானி! காரணம் இதுதான்


இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடன், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணைந்திருப்பது, வணிக சந்தையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்பான தொழில்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக  உக்கிரமாக வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் குளிர் பானங்களை விரும்பு குடிக்கின்றனர்.

இந்நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் முகேஷ் அம்பானி, இந்தியாவில் விற்பனையாகும் பெப்சி, கோகோ கோலாவிற்கு போட்டியாக குளிர்பான வணிகத்தை கையில் எடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரனுடன் இணையும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி! ஏன் தெரியுமா@pti

 குஜராத்தை சேர்ந்த கேம்பா கோலா(campa cola) குளிர்பான நிறுவனத்தை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதுடன், அதனை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கேம்பா கோலா

இதன்படி ‘the Great indian taste’this summer’ என்ற வாசகத்துடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு கெம்பா கோலா மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்துள்ளது.

முத்தையா முரளிதரனுடன் இணையும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி! ஏன் தெரியுமா@ap

இதனை புதிதாக சந்தை படுத்தியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு, கேம்பா லெமன் என மூன்று வகையான குளிர்பானங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேம்பா கோலாவை மேலும் முன்னேற்றும் வகையில், இலங்கை நிறுவனத்துடன் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

முத்தையா முரளிதரனுடன் இணையும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி! ஏன் தெரியுமா@reliance group

இதற்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனத்துடன் இணைந்து, ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

முரளிதரனுடன் கூட்டணி

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, அலுமினிய கேன்களில் கேம்பா கோலாவை பேக்கிங் செய்து விநோயகம் செய்யவுள்ளது.

முத்தையா முரளிதரனுடன் இணையும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி! ஏன் தெரியுமா@reliance group

இதற்காக சிலோன் பீவரேஷ் நிறுவனம் வரும் காலத்தில் இந்தியாவில் பேக்கிங் பணிக்காக தொழிற்சாலையை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது துவங்கப்படும் வரை இலங்கை தொழிற்சாலையிலிருந்து டின்னில் அடைக்கப்பட்ட கேம்பா கோலா தயாரித்து அனுப்பும் என தகவல் வெளியாகியுள்ளது.

1970-1980களில் இந்திய கோல்ட் டிரிங்க் சந்தையில் முன்னிலையிலிருந்த கேம்பா, கோலா நிறுவனத்தை மீண்டும் சந்தைப்படுத்தியிருப்பதோடு, முரளிதரனுடன் இணைந்திருப்பது வணிக உலகத்தில் பேசு பொருளாகியுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.