சென்னை : நடிகர் விஜய்யை காலி பண்ண அஜித் பக்காவாக பிளான் போட்டு வைத்திருப்பதாக பிரபலம் ஒருவர் இணையத்தில் சூப்பரான தகவலை கூறியுள்ளார்.
இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு 70 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் 40 நாட்கள் அஜித் நடிக்கும் போர்ஷன் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விடாமுயற்சி : இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, படம் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார். அதில், அஜித்தின் 62 படத்தோட அப்டேட் கேட்டு கேட்டு ஒருவழியாக அஜித்தின் பிறந்த நாள் அன்று விடாமுயற்சி என்ற பெயரை அறிவித்து இருக்கிறார்கள். அது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், விடாமுயற்சி என்ற பெயர் நன்றாக இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்தார்கள்.
சரியாகி விடும் : அஜித்தின் படங்களுக்கு தொடர்ந்து வலிமை, துணிவு என தமிழில் பெயர் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்திற்கும் விடாமுயற்சி என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் படத்தின் பெயரை கேட்பதற்கு அப்படித்தான் இருக்கும். ஆனால், படம் குறித்த அப்டேட்டுகள் வர வர அது சரியாகி விடும்.
நல்ல தமிழ் பெயர் : விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குவது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. மகிழ் திருமேனி ஒரு தமிழ் இலக்கிய ஆர்வலர், அதையெல்லாம் தாண்டி நல்ல ஆங்கில புலமைக்கொண்டவர், அவரின் முந்தைய படங்களான மிகாமன், தடையகத் தாக்க என அனைத்துப்படங்களும் நல்ல தமிழ் பெயரிலேயே வைத்துள்ளார்.
அஜித்தின் மாஸ்டர் பிளான் : அதேபோல விடாமுயற்சியில் யார் யார் நடிக்கிறார்கள், படப்பிடிப்பு எப்போது என கேள்விகளை அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். நமக்கு கிடைத்த தகவலின் படி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும். ஜூலையில் படப்பிடிப்பை தொடங்குவதற்கு காரணம் என்னவென்றால், சகபோட்டியாளரான விஜய்யை ஜெயித்தே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறார் அஜித்.
2024 தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் : தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையும் ஜூலையில் தொடங்கி படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை முடித்து 2024ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விடாமுயற்சி படம் தமிழ்புத்தாண்டுக்கு வெளியாகும் போது எதிர்முனையில் தளபதி 68 படம் வெளியாக வேண்டும் என்பது அஜித்தின் விருப்பமாக உள்ளது.
வசூலை அள்ளிய துணிவு : இதற்கு காரணம், என்னவென்றால், அண்மையில் வெளியான வாரிசு மற்றும் துணிவு இருபடங்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இதில் வாரிசுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும், துணிவு படத்தை யாருமே பார்க்க மாட்டார்கள், வசூலை பெறாது என்று எல்லாம் பேச்சு பரவலாக எழுந்தது. ஆனால், கடுமையாக எழுந்த விமர்சனத்தை முறியடித்து மற்ற மாநிலங்களில் கலெக்ஷனை அள்ளியது.
விடாமுயற்சி VS தளபதி 68 : அஜித் மட்டும் நினைத்து இருந்தால் அஜித் 62 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியிலேயே தொடங்கி இந்த ஆண்டு இறுதியிலேயே படத்தை வெளியிட்டு இருக்கலாம். ஆனால், அஜித் வாரிசு -துணிவு படம் மோதிக்கொண்டது போல விடாமுயற்சி- தளபதி 68யோடு மோதிப்பார்க்க தயாராகி விட்டார் என்று படம் குறித்து பல தகவல்களை செய்யாறு பாலு கூறியுள்ளார்.