சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த மோக்கா புயல் அதிதீவிர புயலாக இன்று இரவு மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதன் ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதிகளில் கடந்து எட்டாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கி அது படிப்படியாக வலுப்பெற்றது. […]