புதுடில்லி : தென்சீனக்கடல் பகுதியில் நடைபெற்ற முதல் ‘ஆசியான்-இந்தியா’ கடல்சார் போர் பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. புருனே இந்தோனேஷியா மலேசியா பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் தாய்லாந்து வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளின் கடற்படை இந்த கடல்சார் பயிற்சியில் பங்கேற்றனர்.
இந்தக் கடற்படை பயிற்சியில் 9 கப்பல்கள் உட்பட 1400 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். தில்லி ஐ.என்.எஸ். சாத்பூரா கடலோர ரோந்து விமானம் பி-8.ஐ. மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்றன.
மே 2 முதல் மே 8ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் மூலம் தரையிறங்குதல் கடல்சார் அதிரடி நடவடிக்கைகள் உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இது இப்பிராந்திய அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவையை ஊக்குவித்து இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் ஒருங்கிணைந்து செயல்படும் கடற்படை உத்தியை மேம்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement