சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா தன்னுடைய இரண்டாவது சீசனை துவங்கி அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்தத் தொடரில் கண்ணம்மாவாக மாறி, அவர்களது குடும்பத்தினருடன் ஒன்றி படுத்த படுக்கையாக இருந்த அவரது அம்மாவை எழுந்து நடமாட செய்துள்ளார்.
இதனிடையே பாரதிக்கும் கண்ணம்மாவையும் அவரது நடவடிக்கைகளையும் மிகவும் பிடித்துப் போக, அவர் காதல் வசப்பட்டுள்ளார்.
கண்ணம்மாவிடம் காதலை வெளிப்படுத்திய பாரதி : விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இடையான முக்கியத்துவத்தை தன்னுடைய தொடர்களுக்கும் கொடுத்து வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என இந்த சேனலின் அடுத்தடுத்த தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள், விஜய் டிவியின் டிஆர்பியில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. மற்ற தொடர்களும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்நிலையில் விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மாவிற்கும் சிறப்பான இடம் காணப்படுகிறது. சமீபத்தில்தான் இந்த தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றது. அந்த வகையில் உடடினயாக இந்த தொடரின் இரண்டாவது பாகமும் துவங்கப்பட்டு அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களை கவரும்வகையில் கொடுத்து வருகிறது. முதல் பாகத்தில் இருந்ததை போல இல்லாமல் இரண்டாவது பாகத்தில் அருணிற்கு பதிலாக சிபு சூர்யன் ஹீரோவாகியுள்ளார். நாயகியாக முதல் சீசனில் நடித்துவந்த வினுஷாவே நடித்து வருகிறார்.
பாரதிக்கு சொந்தமான பள்ளியில் வேலைக்கு சேரும் கண்ணம்மா, அவரை பல வகையில் கவர்கிறார். மேலும் தனக்கான மனைவியாக இந்த பிரபஞ்சம் கண்ணம்மாவை அனுப்பி வைத்ததாக பாரதி நினைக்கும் அளவில் அடுத்தடுத்த சம்பவங்களும் நடக்கின்றன. பாரதி இரண்டுமுறை விடும் மாலை, கண்ணம்மா கழுத்தில் சென்று சேர்கிறது. இதேபோல அவர் கையில் இருந்து கண்ணம்மா குங்குமத்தை வாங்கி தன்னுடைய நெற்றியில் இட்டுக் கொள்கிறார். இதையடுத்து கண்ணம்மா மீது காதல் வயப்படுகிறார் பாரதி.
தன்னுடைய காதலை கண்ணம்மாவிடமும் பாரதி வெளிப்படுத்துகிறார். ஆனால் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் கண்ணம்மா மௌனம் சாதிக்கிறார். இதனால் பாரதி குழப்பமடைந்து தன்னுடைய நண்பன் தண்டத்திடம் புலம்புகிறார். தான் சிறிது காலம் தாழ்த்தி தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கலாமோ என்று அவருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதையடுத்து அவருக்கு தண்டம் சமாதானம் சொல்கிறார்.
இதனிடையே, பாரதியை அவரது அம்மாவிடம் திட்டு வாங்க வைக்கவும் அவரை வீட்டை விட்டு துரத்தும் சூழலை ஏற்படுத்தவும் அவரது அத்தை மகன் திட்டமிட்டு இளநீரில் மாத்திரைகளை கலந்து பாரதிக்கு கொடுப்பதாக இன்றைய ப்ரமோ காணப்படுகிறது. இதையடுத்து பாரதியும் குடித்துவிட்டு வருவதாக காணப்படும் நிலையில், சவுந்தர்யா, கடுமையான கோபத்தில் தன்னுடைய மகனை திட்ட, கடைசியில் பாரதி, தான் நடித்ததாக அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.