இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Venkat Prabhu’s Custody: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாளை வெளியாகவிருக்கும் கஸ்டடி படத்தின் கதை தெரிந்துவிட்டது. இருந்தாலும் படம் பார்க்க ரசிகர்கள் நிச்சயம் தியேட்டருக்கு செல்வார்கள்.
கஸ்டடிகோலிவுட்டை கலக்கி வரும் வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகவிருக்கிறது. கஸ்டடி மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார் வெங்கட் பிரபு. நாக சைதன்யா தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கிறார். யு/ஏ சான்று பெற்றிருக்கும் கஸ்டடி படம் மே 12ம் தேதி அதாவது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
நாக சைதன்யா”ஷூட்டிங் டைம்ல CSK Matchபார்க்க போயிட்டேன்”
வெங்கட் பிரபுகஸ்டடி படத்தை விளம்பரம் செய்து வருகிறார் வெங்கட் பிரபு. அப்பொழுது படத்தின் கதையை சொல்லிவிட்டார். வெங்கட் பிரபு கூறியதாவது, இது பாட்டி வடை சுட்ட கதை தான். ஆனால் அதை எப்படி சுட்டார் என்பதை வித்தியாசமாக காட்டியிருக்கிறோம். மலையாள படமான நயாட்டுவை பார்த்து இன்ஸ்பையர் ஆகி கஸ்டடி படத்தை எடுத்தேன் என்றார்.
Custody: கஸ்டடி கதைலாம் பெருசா இல்ல, பாட்டி வடை சுட்ட கதை தான்: வெங்கட் பிரபு
ஹீரோகஸ்டடி படத்தில் வில்லன் இறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் ஹீரோவின் வேலை. அது சாதாரண விஷயம் இல்லை. இருப்பினும் வில்லன் உயிருடன் இருக்கணும். அதற்கு ஹீரோ தான் பொறுப்பு என்கிறார் வெங்கட் பிரபு. வழக்கமாக வில்லனை ஹீரோ கொலை செய்வது போன்று காட்டுவார்கள். ஆனால் கஸ்டடியிலோ வில்லன் உயிரை காப்பது ஹீரோவின் கடமையாகிவிட்டது. அப்படி வில்லனை ஹீரோ காக்கும் அளவுக்கு என்ன தான் விஷயம் என்பதை தெரிந்து கொள்ளத் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு நிச்சயம் செல்வார்கள்.
நாக சைதன்யாகஸ்டடி பற்றி வெங்கட் பிரபு கூறியதாவது, கோவிட் நேரத்தில் என் மாநாடு படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் கஸ்டடி பட கதையை எழுதத் துவங்கினேன். மலையாள படமான நயாட்டுவில் இருந்து இன்ஸ்பிரேஷன் கிடைத்தது. எனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது. அதனால் அது போன்ற ஒரு படத்தை கமர்ஷியல் படமாக எடுக்க நினைத்தேன். கதை எழுதிய போது லவ் ஸ்டோரி படத்தில் இருந்து ஒரு பாடல் வீடியோ பார்த்தேன். உடனே நாக சைதன்யாவை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தேன் என்றார்.
Naga Chaitanya: சமந்தாவுடனான விவாகரத்து பற்றி மனம் திறந்த நாக சைதன்யா: இப்படி சொல்ல பெரிய மனசு தான்
க்ரித்தி ஷெட்டிஎன் படத்தில் டிரைவில் ஸ்கூலில் இன்ஸ்ட்ரக்டராக வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறார் க்ரித்தி ஷெட்டி. அவர் ஒரு நல்ல நடிகை. முதலில் அவரை நடிக்க வைக்க தயங்கினேன். பின்னர் அவரை சந்தித்தபோது என் ஹீரோயின் ரேவதி கதாபாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமானவர் என்பதை புரிந்து கொண்டேன் என வெங்கட் பிரபு மேலும் தெரிவித்தார்.
சிவாஒரு சின்ன ஊரில் இருக்கும் கான்ஸ்டபிள் சிவாவை பற்றிய கதை தான் கஸ்டடி. சிவாவின் தனிப்பட்ட பிரச்சனையுடன் படம் துவங்கும். அதன் பிறகு அவர் பெரிய பிரச்சனையில் சிக்குவார். இடைவேளைக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு ஆக்ஷன் துவங்கும். அதில் இருந்து உங்களால் வேறு எங்கும் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கும் என்கிறார் வெங்கட் பிரபு.