வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ”இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிப்பேன்,” என, அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டி, கடந்த மார்ச்சில் பொறுப்பேற்றார். இந்நிலையில், தான் துாதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை, புதுடில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அவர் ஒப்படைத்தார்.
இதன் பின், கார்செட்டி பேசியதாவது:இந்திய ஜனாதிபதியிடம் நியமன சான்றிதழை அளித்ததை எனக்கு கிடைத்த கவுரமாக கருதுகிறேன்.
இந்திய – அமெரிக்க உறவு தற்போது நல்ல நிலையில் உள்ளது.இதுபோன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதை கவுரவமாக நினைக்கிறேன்.என் பணிக் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையோன நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிப்பேன். இந்திய மக்களுடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement