குடகு,இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கரிஷ்மா கலியாண்டா, 35. கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், நாபொக்லுவை பூர்வீகமாக கொண்டவர்.
அவருக்கு 4 வயதாக இருக்கும் போது, பெற்றோர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
இதையடுத்து இங்கே படித்து முதுகலை பட்டம் பெற்ற கரிஷ்மா, 2000ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். பின், இக்கட்சியின் சார்பில், 2015, 2019 சட்டசபை தேர்தலில் ஹோல்ஸ் வொர்தி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
கடந்த மாதம் லிவர்பூல் தொகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் கரிஷ்மா எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். இதையடுத்து, நேற்று எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்றுக்கொண்டார்.
அப்போது, குடகின் கொடவா சமூக பெண்கள் அணியும் பாரம்பரிய உடை அணிந்து அனைவரையும் கவர்ந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement