சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராவண கோட்டம்’. இந்தப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ‘மதயானைக்கூட்டம்’ படம் மூலம் பிரபலமானவர் இவர். நாளை வெளியாகியுள்ள இந்தப்படம் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘ராவண கூட்டம்’ படம் குறித்து சாந்தனு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘ராவண கோட்டம்’ படத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாந்தனுவின் குடும்ப நண்பர் கண்ணன் ரவி என்பவர் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். கருவேலம் காட்டு அரசியலை பேசும் விதமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ‘இராவண கோட்டம்’ எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் இந்தப்படம் ஒரு குறிப்பிட்ட இனத்தினரை காயப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இதனால் இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை படக்குழுவினர் முழுமையாக மறுத்துள்ள நிலையில், இந்தப்படம் குறித்து சாந்தனு அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘இராவண கோட்டம்’ படம் தொடர்பாக வலைப்பேச்சு யூடிப் சேனலுக்கு பேட்டியளித்த சாந்தனு, விக்ரம் சுகுமாரன் கூறிய ஒருசில கதைகளில் இந்தப்படத்தை தேர்ந்தெடுத்ததாகவும், மக்கள் பிரச்சனையை கூறும் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு ‘இராவண கோட்டம்’ கதையை செலக்ட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தப்படத்திற்காக வெயிலில் நின்று, இராமநாதபுரம் மக்களில் ஒருவராக மாற மெனக்கெட்டதாகவும் கூறியுள்ளார்.
Custody: ‘கஸ்டடி’ படம் காப்பியா.? நாளை தெரியும்: வெங்கட் பிரபு அதிரடி..!
மேலும், ‘இராவண கோட்டம்’ படம் ஒரு குறிப்பிட்ட இனத்தினரை காயப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள சாந்தனு, இது வேண்டுமென்று கிளப்பிவிடப்பட்ட வதந்தி. இதை பொய்யென நிரூபிக்க முதலமைச்சரிடம் கூட படத்தை போட்டு காட்ட தயார். அதையும் மீறி இந்தப்படத்தின் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் நானும், இயக்குனரும் ஜெயிலுக்கு போகக்கூட தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2019 ஆண்டே துவங்கப்பட்ட இந்தப்படம் பட்ஜெட் மற்றும் கொரோனா காரணமாக பலமுறை தள்ளிப்போய் தற்போது வெளியாகவுள்ளதாகவும் கூறியுள்ளார் சாந்தனு. இதனிடையில் ‘இராவண கோட்டம்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், படத்தில் ஒருசில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக வதந்திகள் முற்றிலும் பொய்யானது. தயவுசெய்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலும் செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Farhana: வேதனையா இருக்கு.. ‘பர்ஹானா’ பட சர்ச்சை குறித்து தயாரிப்பு நிறுவனம் பரபர விளக்கம்.!