Rajamouli – கதையில் மாற்றம் இருக்காது… 10 பாகங்கள் – ராஜமௌலி வெளியிட்ட பிரமாண்ட அப்டேட்

சென்னை: Rajamouli (ராஜமௌலி) தான் இயக்கப்போகும் மகாபாரதம் குறித்து இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறத்.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலியை புகழ்ந்த மணிரத்னம்: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. மணிரத்னமேகூட, பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வசூலை அள்ளிய பாகுபலி: ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஆஸ்கரில் ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக் மாறியிருக்கிறார்.

Director Rajamouli Opens up about Mahabharata

அடுத்த படம்: ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார். இந்தச் சூழலில் ஊடகம் ஒன்றுக்கு மகாபாரதத்தை படமாக்குவது குறித்து அளித்த பேட்டியில், இதற்கு முன்பு மக்கள் பார்த்த அல்லது படித்த கதாபாத்திரங்கள் நான் எடுக்கப்போகும் மகாபாரதத்தில் இருக்காது. கதையில் மாற்றமில்லை என்றாலும், கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளும் மேம்படுத்தப்படும். மொத்தத்தில் எனது பாணியிலான மகாபாரதமாக இருக்கும்

பத்து பாகங்கள்: மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்கும் நிலை எனக்கு உருவானால், நாட்டில் உள்ள மகாபாரதத்தின் ஒவ்வொரு பதிப்பையும் நான் படிப்பேன். அதற்குக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். மொத்தத்தில் 10 பாகங்கள் கொண்ட படமாக நான் எடுக்கப்போகும் மகாபாரதம் இருக்கும் என்பதை மட்டும் இப்போது என்னால் உறுதியா சொல்ல முடியும்” என்றார். அவரது இந்தப் பேட்டியை அடுத்து ஒரு பாகத்துக்கே பட்ஜெட் பல நூறு கோடி பட்ஜெட் தேவைப்படும் சூழலில் பத்து பாகங்கள் என்றால் பட்ஜெட் தொகை எவ்வளவு வரும் என ரசிகர்கள் வாய் பிளந்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.