புதுடில்லி : மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தலைமையிலான குழுவினருடன் புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் மூலம் உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கும் முயற்சி குறித்து ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.
மேலும் இஸ்ரேல் நிறுவனங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர் இந்தியாவில் முதலீடு செய்யவும் இந்திய நிறுவனங்களுடன்இணைந்து ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்த இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் நவீன தொழில்நுட்பங்களை தயாரிக்க இந்திய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார்.
அத்துடன் ‘இந்தியா – இஸ்ரேல்’ இடையிலான 30 ஆண்டுகால தூதரக உறவை அங்கீகரித்து இதை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றவும் ஒப்புக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement