வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: பெண் எழுத்தாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்புக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2016 அதிபர் தேர்தலின் போது ஆபாச நடிகையுடனான தொடர்பு குறித்து தெரிவிக்காமல் இருக்க பணம் கொடுத்ததாக டொனால்டு டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது.
இந்நிலையில் 76 வயதாகும் டிரம்ப் 1996ல் மன்ஹாட்டனில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது 79 வயதாகும் பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் ஜீன் கரோலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. இதற்காக 41 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே அடுத்தாண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் தொடர்ந்து இரண்டு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement