புதுடில்லி : ஜம்மு – காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். முகாம் மீது 2017ல் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் சொத்துக்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு – காஷ்மீரின் லெத்போரா என்ற இடத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது 2017 டிச. 30ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசிவிட்டு முகாமுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று பயங்கரவாதிகளுடன் நடந்த 10 மணி நேர துப்பாக்கி சண்டையின் இறுதியில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்த மூளையாக இருந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதியான பயாஸ் அஹ்மது மாக்ரே என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பயாஸ் உட்பட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் நான்கு பேர் மீது 2019ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பயாஸ் அகமதுவுக்கு சொந்தமான கடைகள் உள்ளிட்ட சொத்துக்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வெவ்வேறு பயங்கரவாத குழுக்களை சேர்ந்த மேலும் மூன்று பேர் சொத்துக்களையும் என்.ஐ.ஏ. பறிமுதல்செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement