மக்கள் பெரும்பாலும் வாங்க விரும்ப கூடிய இருசரக்கர வாகனத்தில் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனங்கள் இல்லாமல் இருக்காது. தோற்றத்திலும் வடிவத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குவது வழக்கம்.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்களின் கவனம் சென்றுள்ளது. இதன் காரணமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கி உள்ளது.
அதன்படி தமிழகத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிகல் வாகன ஆலை அமைய உள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் செய்யாறு பகுதியில் ராயல் என்ஃபீல்டு ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.