சென்னை: சென்னை, வில்லிவாக்கம், கிழக்கு சந்திக் கடவு சாலையில், அண்ணா நகர் – கொளத்துாரை இணகை்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்துக்கு, மேயர் சிட்டிபாபு பாலம் என பெயர் சூட்ட, மாநகராட்சிக்கு, அரசு கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அனுமதி அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 6-வது மண்டலம், 64-வது கோட்டம் பகுதியில், கொளத்துார் – வில்லிவாக்கம் அருகில் கிழக்கு சந்திக்கடவு சாலையில் இருந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், 61.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதனால், கொளத்துாரில் இருந்து அண்ணாநகருக்கு, பெரம்பூர், அயனாவரம் வழியாக, ஐந்து கி.மீ., துாரம் சுற்ற வேண்டிய நிலை நீங்கி உள்ளது. இதற்கு, ‘மேயர் சிட்டிபாபு மேம்பாலம்’ என்ற பெயர் சூட்டி, மாநகராட்சி மாமன்றத்தில் பின்னேற்பு தீர்மானம் நிறைவேற்ற, அனுமதிக்கும்படி, மாநகராட்சி ஆணையர், அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து, அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதற்கான அனுமதியை வழங்கி, வெள்ளிக்கிழமை கடிதம் எழுதி உள்ளார்.