அதிசயம்.. டிரைவர் இல்லாத பேருந்து.. அடடா அப்பப்பா டெக்னாலஜி.. ஐரோப்பாவில் அறிமுகம்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஐரோப்பிய நாட்டில் டிரைவர் இல்லாத பேருந்து வருகிற திங்கள் கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்… பயனர்கள் அதிர்ச்சி!

நாளுக்கு நாள் டெக்னாலஜி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் நாளை மறுநாள் காலாவதியாகிவிடுகிறது. Artificial Intelligence, Internet of Things என உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. நிலவிற்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் எலான் மஸ்க், டிரைவர் இல்லாமல் கார் தானாக இயங்கும் வகையில் தனது டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

இப்படி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், மனிதன் மூளையைப் பயன்படுத்தி செய்யப்படும் பல லட்சம் வேலைவாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திறனால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை இறைச்சியில் தொடங்கி பல்வேறு செயல்பாடுகள் அசுர வேகத்தில் முன்னேறி வருகின்றன. இந்தநிலையில் டிரைவர் இல்லாத பேருந்தை மேற்கத்திய ஐரோப்பிய நாடு அறிமுகப்படுத்த உள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்த யுனைட்டட் கிங்டம் (United Kingdom) இந்த நவீன மேம்படுத்தப்பட்ட பேருந்தை அடுத்த வாரம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் பயணிகள் வீதம் 14 மைல்கள் அதாவது 22.5 கிலோமீட்டர் தூரத்திற்கு டிரைவர் இல்லாத பேருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம், உலகிலேயே டிரைவர் இல்லாத பேருந்தை முதன்முதலில் இயக்கிய சாதனை அந்த நாட்டிற்கு உரித்தாகும். பயணிகளின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திட்ட இயக்குனர் பீட்டர் ஸ்டீவன்ஸ், டிரைவர் இல்லா பேருந்து ஏற்கனவே சோதனை முயற்சியில் இயக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பயங்கரம்.. மாலுக்குள் துப்பாக்கிச்சூடு.. 9 பேர் பலி.. பீஸ்ட் பாணியில் காலி செய்த போலீஸ்!

வருகிற திங்கள் கிழமை முதல் ஒரு மணி நேரத்திற்கு 50 மைல்கள் என்ற கணக்கில் பேருந்து இயக்கப்பட உள்ளதாகவும், பேருந்தின் இயக்கத்தை கண்காணிக்க டிரைவர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடத்துனர் டிக்கெட்களை விநியோகிப்பார் எனவும், ஆட்டோமேட்டிக் மோடில் இயங்கும் பேருந்தை டிரைவர் கண்காணிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி என வர்ணித்த அவர், மனிதர்களின் எதிர்வினையை விட டெக்னாலஜியின் செயல்பாடுகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.