திருப்பூரில் சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (35). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை புரிந்து தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுளாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டரான சிவமுருகன் (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இவர்களுடன் சிறுமியும் வசித்து வந்த நிலையில், மஞ்சுளா வீட்டில் இல்லாத நேரத்தில் சிவமுருகன் சிறுமியிடம் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி இதுகுறித்து தாயிடம் கூறியுள்ளார். ஆனால் சிறுமியின் தாய் இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் சிவமுருகன் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து சிறுமி இது குறித்து திருப்பூர் சைடு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் சட்டத்தின் கீழ் சிவமுருகனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.