சென்னை: நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போன் என்ட்ரி-லெவல் பயனர்களை தங்களது இலக்காக வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நோக்கியா சி22 போனை தற்போது களம் இறக்கியுள்ளது அந்நிறுவனம்.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்
- ஆக்டா-கோர் Unisoc T606 சிப்செட்
- பின்பக்கத்தில் 13 + 2 மெகாபிக்சல் கேமராக்களை கொண்டுள்ளது
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- டூயல் நேனோ சிம் கார்டு ஸ்லாட்
- டைப் சி சார்ஜிங் போர்ட்
- 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
- பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 2ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.7,999
- 4ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.8,499
Just go, and keep on going. #LiveUntamed with the 3-day battery life, 13MP dual rear camera, and 2 years of security updates on the Nokia C22.
Pre-book now: https://t.co/tKvqK84PLR#NokiaC22 pic.twitter.com/5cVOKnel2L
— Nokia Mobile India (@NokiamobileIN) May 12, 2023