இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தொடரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி இன்று (12) கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை நேற்று (11) நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றது.
இதனைதொடர்ந்து 101 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியின் தலைவர் சாமரி அத்தபத்து, முதல் ஓவரிலிருந்தே அதிரடியான ஆரம்பத்தை எடுத்து வெற்றிக்கு தேவையான அடித்தளத்தை வழங்கினார். சாமரி ஒரு சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் எடுத்தார். கவிஷா டிலஹரி 18 பந்துகளில் 20 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 42 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதற்கமைய இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 101 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மகளிர் அணி தொடரை 1-1 என சமன் செய்தனர். இந்நிலையில் போட்டியின் தீர்க்கமான மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டி இன்று (12) நடைபெறவுள்ளது.