“உச்ச நீதிமன்றம் செல்வோம்; தேர்தலை எதிர்கொள்வோம்; மக்கள் முடிவு எடுக்கட்டும்” – உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

உலகம் முழுவதும் மகாராஷ்டிராவின் பெயர் இழுக்கப்படுகிறது. அதனை பிரதமர் நரேந்திர மோடி நிறுத்தவேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் ஆளுநர் கொஷாரியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இது போன்ற சட்டவிரோத காரியங்களை எதிர்காலத்தில் யாரும் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உத்தவ் தாக்கரேயிடம் இருக்கும் கவுன்சிலர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களிடம் வரவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் பதவியை பறிக்கவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் ஆளுநராக இருந்த கொஷாரியா செய்த தவறு காரணமாகவே ஏக்நாத் ஷிண்டே முதல்வராக நேரிட்டதாகவும், 16 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு தொடர்பாக சபாநாயகர் இறுதி முடிவு எடுக்கலாம் என்றும், இதில் சபாநாயகரின் பங்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் வேறு அமர்வு முடிவு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு உத்தவ் தாக்கரேயிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதேசமயம் ஏக்நாத் ஷிண்டே அரசும் தப்பித்துக்கொண்டது. தங்களது அரசை மீண்டும் அமைக்கவேண்டும் என்ற உத்தவ் தாக்கரேயின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உத்தவ் தாக்கரே தனது பதவியை தானாக ராஜினாமா செய்ததால் அதனை தங்களால் ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, “நாம் அனைவரும் தேர்தலை சந்திப்போம். மக்கள் இறுதி முடிவு எடுக்கட்டும். நான் ராஜினாமா செய்துவிட்டேன். ராஜினாமா செய்தத்தில் எனக்கு மகிழ்ச்சியே. ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது. எனவே ஷிண்டே தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். 16 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு தொடர்பாக சபாநாயகர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இறுதி முடிவு வேண்டும். அப்படி எடுக்கவில்லையெனில் நாங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்வோம். சபாநாயகர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் இது குறித்து இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.