தனக்கு நடந்தது குழந்தை திருமணம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் மக்களிடையே ஒற்றுமை குறைந்து வருவதாக கூறினார். தமிழ்நாட்டில் எந்த இடம் பிடிக்கும் என்ற அவரிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் மக்கள் மிகவும் அன்பாக பழகுவார்கள், இங்கு இட்லி, தோசை உணவு மிகவும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். நான் எனது சிறுவயதில் சரியான சாலை வசதி இல்லாத காலத்தில் 8 கி.மீ நடந்து பள்ளிக்கு சென்றேன்.
நான் ஆளுநர் பதவிக்கு விரும்பி வரவில்லை. இது ஒரு கடமையாக கருதி மக்களுக்கு சேவை செய்ய வந்துளேன் என்று கூறினார். மேலும், தனக்கு நடந்தது குழந்தை திருமணம் என ஆளுநர் குறிப்பிட்டார்.
தனது வாழ்வில் தூண்போல தனது மனைவி பக்கபலமாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநர் குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
newstm.in