நம் நாட்டின் பாரம்பரிய கயிற்று கட்டில் ஒரு லட்ச ரூபாய் என்று அமெரிக்காவில் உள்ள இணைய வணிக தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Etsy என்ற இ-காமர்ஸ் தளத்தில் இந்தியாவின் பாரம்பரிய கயிறு கட்டில் ரூ.1,12,039 என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்த கட்டில் தற்போது வழக்கொழிந்து போய்விட்டது.
ஆனால் அமெரிக்காவில் ஒரு லட்ச ரூபாய் என்கின்றனர். இவ்வளவு விலை கொடுத்து யாராவது கயிறு கட்டிலை வாங்குவார்களான என நினைத்தால், இன்னும் 4 கட்டில்கள் தான் இருக்கிறது என்றும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அற்புதமான இந்த படுக்கையை நீங்கள் தனித்துவமான அலங்காரத்திற்காகப் பயன்படுத்தலாம், இது எந்த வகையான அறைக்கும் மற்றும் வெளிப்புறங்களுக்கும் உட்புறங்களுக்கும் ஏற்றது என்று கூறப்பட்டுள்ளது.
அகலம் 36 அங்குலம், உயரம் 72 அங்குலம் என கட்டிலின் முழு விவரங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பலரும் இணைத்தில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். https://www.etsy.com/in-en/?ref=lgo என்ற இணையதளத்தில் கட்டில் விற்கப்படுகிறது.
newstm.in