ஓபிஎஸ்: ‘அது வேற ஸ்டாலின்.. இது வேற ஸ்டாலின்’.. என்னப்பா நடக்குது இங்க.?

மாநிலக் கல்வி கொள்கை விவகாரத்தில் திமுகவை

கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ், டிடிவியை தனியாக சந்தித்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்!

இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியபோது தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் முக

. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியவர்

தலைவர் முக ஸ்டாலின்.

இவையெல்லாம் அந்தக் காலம். அதாவது, திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலம். ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, புதியக் கல்விக் கொள்கையில் அதன் நிலைப்பாடு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிட்டது. தேசியக் கல்விக் கொள்கையை திமுக அரசு எதிர்த்தாலும், மறைமுகமாக “இல்லம் தேடி கல்வி”, “நான் முதல்வர்” போன்ற திட்டங்கள் மூலம் தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தெரிவித்து இருந்தார்.

இவையெல்லாம் இந்தக் காலம். அதாவது, மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கின்ற காலம். திமுகவின் இரட்டை வேடத்தை நிரூபிக்கும் வண்ணம் மாநிலக் கல்விக் கொள்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மாநில அரசின் தேசியக் கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமாகவே உருவாகிறது என்று திமுகவால் நியமனம் செய்யப்பட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், அரசாணைப்படி இலக்குகளை அடைய பணிகளை மேற்கொண்டபோது, வலுக்கட்டாயமாக சில நிபந்தனைகள் தன்மீது திணிக்கப்படுவதாகவும், தனக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் முதல்வரின் செயலாளர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். மேலும், ஜனநாயகமற்ற முறையில் செயல்படும் தலைமை, சில மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்கள், முறையற்ற தலையீடுகள் ஆகியவற்றால் உயர் மட்டக் குழு இயங்க முடியாமல் தடுமாறுகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதல்வரிடம் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்றும், எனவே, இனியும் குழுவில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும், கனத்த இதயத்துடன் உயர்மட்டக் குழுவிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். மாநிலக் கல்விக் கொள்கைக்காக ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்துவிட்டு, அதனை மிரட்டுவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.

இதன் மூலம் தேசியக் கல்விக் கொள்கையில் திமுகவிற்கு உடன்பாடு இருக்கிறது என்பதும், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமே என்பதற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல் நாடகமாடியது என்பதும் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தான் திமுகவின் உண்மையான சுயரூபம். திமுகவிற்கு என்று தனிக் கொள்கை ஒன்றும் கிடையாது.

திமுகவின் நிலைப்பாடு “மதில் மேல் பூனை” என்ற பழமொழிக் கேற்ப அமைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மாநில கல்விக் கொள்கைக்கான உயர்மட்டக் குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசியக் கல்விக் கொள்கை பின்பற்றப்படுமா என்பது குறித்தும், இது எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் முதல்வர் தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்’’ என ஓபிஎஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.