5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் இந்தாண்டு இறுதிக்குள் குறையக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான மின்னணு சிப்களைத் தயாரிக்கும் தைவானின் மீடியா டெக் நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் குவால்கா நிறுவனத்திற்கும் இடையே கடும் தொழில் போட்டி நிலவி வருகிறது. இதனால் அவை கணிசமாக விலையை குறைத்து வருவதால், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
5ஜி சேவை அறிமுகத்திற்கு பிறகு டேட்டா நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்களின் சராசரி மாதாந்திர டேட்டா நுகர்வு, கடந்த ஆண்டு செப்டம்பரில் 22.2 ஜிபி டேட்டாவாக இருந்த நிலையில், இந்தாண்டு மார்ச்சில் 23.1 ஜிபி டேட்டாவாக அதிகரித்துள்ளது.ஏர்டெல் வாடிக்கையாளர்களின் மாதாந்திர டேட்டா பயன்பாடு 20.75 ஜிபி-யிலிருந்து, 21.3 ஜிபியாக உயர்ந்துள்ளது.