கேரளாவில் மருத்துவர்கள் போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிப்பு..!!

கொல்லத்தை சேர்ந்தவர் சந்தீப். பள்ளி ஆசிரியரான இவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தனது குடும்பத்தினருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் துறையின் அவசர எண்ணை தொடர்புகொண்டு அவர் உதவி கோரினார். அதன் அடிப்படையில், காவல் துறையினர் அங்கு சென்றபோது சந்தீப்பின் காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கொட்டாரக்கராவில் உள்ள வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர் சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென சிகிச்சை அறையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்த அவர், வந்தனாவின் முதுகு, வயிற்றுப் பகுதிகளில் பலமுறை குத்தினார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், சந்தீப்பை தடுக்க முயன்றனர். எனினும் காவல் துறையினரையும் தாக்கிய அவர், மேலும் 4 பேரைத் தாக்கி மருத்துவமனையின் சில பகுதிகளைச் சேதப்படுத்தினார்.

பலத்த காயமடைந்த வந்தனா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடுமையான முயற்சிக்குப் பின்னர், காவல் துறையினரிடம் சந்தீப் சிக்கினார் என்று தெரிவித்தார். போதை மறுவாழ்வு மையத்தில் சந்தீப் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய மருத்துவர்கள் சங்கம், கேரள அரசு மருத்துவர்கள் சங்க மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கேரள மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அவசர சிகிச்சை சேவைகளில் மட்டுமே ஈடுபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை வேலைநிறுத்தம் தொடரும் என இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது. கேரள அரசு மருத்துவர்கள் சங்க மருத்துவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.