கேரளா ஸ்டோரி படம் அப்பட்டமான உண்மை – ஹெச் ராஜா!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. நாடு முழுவதும் இப்படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சே ர கிளம்பியுள்ளது. இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தை விபுல் ஷா தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு கேரளாவை சேர்ந்த ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இப்படத்திற்கு தடை விதிக்க கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்குகளில் படம் வெளியானது. இருப்பினும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை, இதானல் பல திரையரங்குகள் படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளன. வட மாநிலங்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தி கேரளா ஸ்டோரி படம் வெளியான 7 நாட்களில் நாடு முழுவதும் 80 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. விரைவில் இது 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை காட்சிப்படுத்தி இருப்பதாக பாராட்டு தெரிவித்திருந்தார். இதனைக் கேட்ட படத்தின் தயாரிப்பாளரான விபுல் ஷா, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “இன்று கேரளா ஸடோரி படம் பார்த்தேன். எள்ளு முனை அளவும் மிகைப்படுத்தப்பட்ட இல்லாமல் அப்பட்டமான உண்மைநிலையை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது பதின்ம வயது பெண் குழந்தைகளுக்கு இப்படத்தை காட்டி அவர்களை நல்வழிப்படுத்த இப்படம் உதவும். IS ஆதரவாளர்களே இப்படத்தை எதிர்ப்பர்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் அக்கட்சியின் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ‘தி கேரளா ஸ்டோரி’ எந்த மதத்திற்கும் எதிரான படம் அல்ல என்று கூறியிருந்த வானதி சீனிவாசன், தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வலியுறுத்தியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.