சம்பளம் வெறும் 30,000 தான், ஆனால் சோதனையில் கிடைத்தது 7 கோடி! சிக்கலில் பெண் அதிகாரி


மத்திய பிரதேச மாநிலத்தில் ஊழல் செய்து 7 கோடிக்கு சொத்து சேர்த்த பெண் அதிகாரி வசமாக சிக்கியுள்ளார்.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொலிஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் ஒப்பந்தப் பொறுப்பு உதவிப் பொறியாளரான ஹேமா மீனா மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

மாதச் சம்பளம் வெறும் 30,000 மட்டுமே வாங்கும் அவர், ஆடம்பரமாக செலவுசெய்துகொண்டு, சொகுசுக்காரில் பயணித்து இயல்புக்கு மாறாக வசதியாக வாழ்ந்துவந்துள்ளார்.

சம்பளம் வெறும் 30,000 தான், ஆனால் சோதனையில் கிடைத்தது 7 கோடி! சிக்கலில் பெண் அதிகாரி | Luxury Cars Tv Land Found Raid Govt Officer HouseHindustan Times

இதையடுத்து அவர்மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரது சொத்துக்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

சோதனையில், 5-7 சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்கள், 20,000 சதுர அடி நிலம், விலைமதிப்பற்ற கிர் இனத்தைச் சேர்ந்த இரண்டு டஜன் கால்நடைகள், ரூ.30 லட்சம் விலையில் உயர் ரக 98 இன்ச் டிவி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

மாதம் ரூ.30,000 சம்பாதிக்கும் 36 வயது ஹேமா மீனா, 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்குச் சென்ற பிறகு, அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பளம் வெறும் 30,000 தான், ஆனால் சோதனையில் கிடைத்தது 7 கோடி! சிக்கலில் பெண் அதிகாரி | Luxury Cars Tv Land Found Raid Govt Officer HouseNDTV

மேலும், அவரது குடியிருப்பு வளாகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பால் நடத்தப்பட்ட தேடுதலில், 100 நாய்கள், முழுமையான வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்பு, மொபைல் ஜாமர்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய ஏராளமான செல்வம் இருப்பது தெரியவந்தது.

வியாழனன்று, அதிகாரிகள் சோலார் பேனல்களை சரிசெய்வது என்ற போர்வையில் மீனாவின் உயர்தர பங்களாவுக்குள் நுழைந்து திடீர் சோதனை நடத்தியது.

ஹேமா மீனா தனது வீட்டைக் கட்ட அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் 7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மேலும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச அரசு அதிகாரி மீது ஊழல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது, மேலும் சரியான விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.