சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'இராவண கோட்டம்' படம் எப்படி இருக்கு.?: விமர்சனம் இதோ.!

‘மதயானைக்கூட்டம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் ரிலீசுக்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘இராவண கோட்டம்’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசன் ஆகியோர் நடிப்பில் ‘இராவண கோட்டம்’ படம் உருவாகியுள்ளது. கண்ணன் ரவி என்பவர் தயாரித்துள்ள இந்தபடத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முக்கோண காதல் பின்னணியில் கருவேலம் காட்டு அரசியலை குறித்து பேசும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார் விக்ரம் சுகுமாரன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு என இரு சமூக மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் மேலத்தெரு மக்களுக்காக பிரபுவும், கீழ்த்தெரு மக்களுக்காக இளவரசும் முன் நின்று வழி நடத்துகின்றனர். சாதியை கடந்து ஒற்றுமையாய் வாழும் இவர்கள் அரசியல் கட்சிகளை உள்ளே அனுமதிப்பதில்லை.

PS 2: 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல்.. ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழுவின் அதிரடி அறிவிப்பு.!

இந்நிலையில் அரசியல் சுயலாபத்திற்காக ஏனாதி கிராமத்தை சேர்ந்த மேலத்தெரு, கீழத்தெரு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘இராவண கோட்டம்’ படத்தின் கதை. 1957 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம், சீமை கருவேல மர பிரச்சனை, கார்ப்ரேட் மாஃபியா உள்ளிட்ட பல விஷயங்களை படத்தில் பேச முயன்றுள்ளார் இயக்குனர் விக்ரம்.

இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த துடிப்பான இளைஞராக ஆக்ரோஷம் கலந்த யதார்த்தமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் சாந்தனு. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கொடுத்த அதே அப்பாவித்தனமான நடிப்பை இந்தப்படத்திலும் கொடுத்துள்ளார் கயல் ஆனந்தி. பிரபுவும், இளவரசும் தங்களது அனுபவப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளனர். மொத்தத்தில் ஒரே படத்தில் பல்வேறு விஷயங்களை பேச நினைத்து அதை அழுத்தமில்லாமல் பதிவு செய்ததால் கவனம் ஈர்க்க தவறிவிட்டது இந்த இராவண கோட்டம்.

Good Night Review: ‘குட் நைட்’ படம் தரும் அனுபவம் இருக்கு..?: முழு விமர்சனம் இதோ.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.